Google+ Followers

Tuesday, May 8, 2012

வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பாக மன்னாரில் விசேட கலந்துரையாடல்


[08-05-2012]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நாட்டில் எவரும் அகதி என்ற அடிப்படையில் வாழ்க்கூடாது எனும் நோக்குடன் வட மாகாண மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.


வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்

திரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர் றிசாட் பதீயுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்தி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 குறித்த விசேட கலந்துரையாடலின் போது 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்ஸிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.
 இதுவரை மீள்குடியேற்றப்படாத மக்கள் மீண்டும் மீள்குடியேற்றப்படும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த பிரதேச காணிகளில் புதைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் அகற்றப்படாமை, காணியில் படையினர் நிலை கொண்டுள்ளமை, குடி நீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, வீதி போன்ற அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதா போன்ற விடையங்கள் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஒவ்வெரு பிரதேசத்திற்கும் பொருப்பான பிரதேசச் செயலாளர்கள் தமது பிரிவில் மீள்குடியேற்றப்பட வேண்டியோரின் விபரங்களையும் தேவைகளையும் முன்வைத்தனர்.
[www.mannarwinadmin]

Monday, May 7, 2012

மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்...


சிறப்பு செய்தி காணொளி இணைப்பு-08-05-2012

மீளக்குடியமர்ந்த மன்னார் நாகதாழ்வு மக்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையில்.உள்ளதாக தெரிவித்துள்ளனர்;


mannar win-~உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை எமக்கு தெரிவித்தால் சம்மத்தபட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்...
தாம் மீளக்குடியமர்ந்த -நாளில் இருந்து அடிப்படை வசதிகள் இல்லாமல்  சிரமப்படுவதாகவும் தெரிவத்துள்ளனர் இது தொடர்பாக மக்கள் தெரிவித்த தகவல் கானொளியில் ..

இந்த மக்கள் தொடர்பாக வன்னி பா.உ செல்வம் அடைக்கலநாதனை தொடர்பு கொண்ட பொழுதுதான் மக்களை சந்தித்து மேலதிக தகவல்களை தருவதாகவும் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும்தெரிவித்துள்ளார் -[www,newmannar.com]

Friday, May 4, 2012

பொன்சேகாவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது!– அனோமா


[ 05-05-2012]
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என அவரது மனைவியான அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நவலோகா தனியார் வைத்தியசாலையிலிருந்து, தேசிய வைத்தியசாலைக்கு மாற்றும் உத்தரவு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலை ஆணையாளரின் இந்தக் கோரிக்கையின் நம்பகத்தன்மை கிடையாது.
என்றுமில்லாதவாறு, சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து சிறைச்சாலை ஆணையாளருக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு சுகமடையும் வரையில் நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க முடியுமாயின், ஏன் சரத் பொன்சேகாவிற்கு வழங்க முடியாது.
சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரின் சேவையை இழக்கச் செய்வதே இந்த உத்தரவின் உள்நோக்கம் என அனோமா பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும்.

                    அமரர் திருமதி தவரெத்தினம் கணபதிப்பிள்ளை

(உயர் விஸ்வப்பிரம்ம குலதிலகம்)
தோற்றம்:-17-12-1959       மறைவு:-19-04-2011
எங்கள் குடும்பத்தின் பேரொளியாய் விளங்கிய ஏற்றமிக்க எம் அன்புத்தெய்வம்,
எங்களை அன்போடும் பண்போடும் பாசத்துடனும் அரவணைத்து நல்வழி காட்டி எழுச்சியுடன் பார் புகழ வாழவைத்த பாசமிகு குடும்பத்தலைவி கண் மூடி எமைவிட்டுப்பிரிந்து ஆண்டு ஒன்று ஆகியும் ஆறாத்துயரில் தவிக்கின்றோம் அம்மா.
எமது குலவிளக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியும்,ஆத்மசாந்திப்பிரார்த்தனை நிகழ்வும் (08-05-2012)செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லமாகிய மன்னார் திருக்கேதிஸ்வரத்திலும்,74/1 வோல்ஸ்லேன்,அழுத்மாவத்தை ,கொழும்பு-15 ஆகிய  இல்லங்களில் விசேடப்பிரார்த்தனையும்,மதியபோசனமும் நடைபெற இருப்பதால் அத்தருனம் உற்றார்,உறவினர்,கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:-கணவர் (பாலா)
                  சகோதரர்கள், மைத்துனர்,
                       மைத்துனிமார்,
தங்கைமார்,மருமக்கள்,
                   அண்ணண்மார்,பேரப்பிள்ளைகள்.

பி.கணபதிப்பிள்ளை ,திருக்கேதிஸ்வரம்.   

Wednesday, May 2, 2012

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம்


(03-05-2012)
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம் கடந்த சித்திரை 29 முதல் வைகாசி 06 ஆம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.


தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் அவர்களின் 26 ஆவது வருட நிணைவு தினம் கடந்த சித்திரை 29 முதல் வைகாசி 06 ஆம் திகதி வரை அனுஸ்ரிக்கப்பட்டு வருகின்றது.

இதனை முன்னிட்டு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொறுப்பாளர் பற்றிக் வினோ வின் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் நினைவு தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றது.

குறித்த சுவரொட்டியில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் போராளிகள் ,ஆதரவாளர்கள் ஆகியோருக்கு மீண்டும் எம் அஞ்சலிகள் என குறிப்பிடப்பட்டள்ளது.

எதிர்வரும் 06 ஆம் திகதி நினைவு தின திகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம் பெற உள்ளதாக ரெலோ வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றது.