Friday, April 27, 2012

சிவாஜிலிங்கத்தின் செயற்பாட்டிற்கு தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கண்டனம்!


[ 28-04-2012]
யாழ்ப்பாணத்தில் (27-04-2012) வியாழக்கிழமை இடம் பெற்ற தந்தை செல்வா வின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இடம் பெற்ற போது குறித்த நிகழ்வில் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் நடந்து கொண்ட முறை குறித்து தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 
இது குறித்து தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவரும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு.ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கையெழுத்திட்டு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அக் கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 26-04-2012 அன்று தந்தை செல்வாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தந்தை செல்வா நினைவு அரங்காவல் குழுவினரால் ஏற்பாடு செய்திருந்த நிலையில் குறித்த நிகழ்வில் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் நடந்து கொண்ட முறை தமிழீழ விடுதலை இயக்கத்தவர்கலாகிய எங்களுக்கு மிகவும் மண வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24-04-2012 அன்று பத்திரிக்கை வாயிலாக தந்தை செல்வா நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராசதுரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்போவதாக திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக எங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி திரு.சிவாஜிலிங்கம் அவர்களிடம் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுருத்தி இருந்தார்கள். இவற்றை சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொண்டிருந்தார்.
இவற்றுக்குப்பின் கட்சியின் கூட்டுப்பொறுப்பையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இவருடைய தனிப்பட்டதே தவிர கட்சிக்கும் இந்த நடவடிக்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை குறிப்பிடுவதோடு இந்த விடயம் சம்பந்தமாக இவரிடம் இருந்து விளக்கம் கோர இருப்பதோடு தேவை ஏற்படும் பட்சத்தில் இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விரும்பத்தகாத செயல் நடந்தமைக்காக நாங்கள் சம்பந்தப்பட்ட அரங்காவல் குழுவினரிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ
திரு.ஹென்றி மகேந்திரன்.
செயலாளர் நாயகம்
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ 

No comments:

Post a Comment